விபஸ்ஸனா தியான முறை
Vipassana Meditation

சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி
திரு ச.நா.கோயங்கா அவர்களால் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறை

எழுத்துரு உதவி (Font help)  |   International Website   |   அச்செடுக்க உகந்த பிரதி (Printable version)

முகப்பு விபஸ்ஸனா - ஓர் அறிமுகம் ஆசிரியரைப் பற்றி... 'வாழும் கலை' (உரை) ஒழுக்க நெறி செய்தி மடல்கள் சென்னை மையம் மற்ற ஊர்களில்... சேர்வதற்கான தகுதிகள் விண்ணப்பித்தல் நன்கொடை சிறுவர் முகாம்கள்

முகாமில் சேர்வதற்கான தகுதிகள்

பொருளடக்கம்

பத்து-நாள் முகாமில் சேர்வதற்கான தகுதிகள் இருபது-நாள் முகாமில் சேர்வதற்கான தகுதிகள் முப்பது-நாள் முகாமில் சேர்வதற்கான தகுதிகள் மூன்று-நாள் முகாமில் சேர்வதற்கான தகுதிகள் ஸதிபட்டான சூத்த முகாமில் சேர்வதற்கான தகுதிகள் வளரிளம் பருவத்தினருக்கான (Teenagers) முகாமில் சேர்வதற்கான தகுதிகள் சிறுவர் முகாமில் சேர்வதற்கான தகுதிகள் 'தம்ம சேது' முகாம் நிரல் பிற இடங்களில் நடைபெறும் முகாம்கள்

பத்து-நாள் முகாமில் சேர்வதற்கான தகுதிகள்

பத்து-நாள் முகாம் என்பது விபஸ்ஸனா தியானமுறைக்கான அறிமுகப் பயிற்சி முகாம் ஆகும். புதியதாக பயிற்சி மேற்கொள்ளும் அனைவரும் முதலில் ஒரு பத்து-நாள் முகாமில் பங்குபெற்ற பின்னரே மற்ற பயிற்சி முகாம்களில் அமர அனுமதிக்கப்படுவர். பத்து-நாள் பயிற்சி முகாமிற்கு விண்ணப்பிக்க இங்கே செல்லவும்.

மேலே செல்க

இருபது-நாள் முகாமில் சேர்வதற்கான தகுதிகள்

இருபது-நாள் பயிற்சி முகாம்களில் பழைய மாணவர்கள் (அதாவது, திரு ச.நா.கோயங்கா அவர்களிடமிருந்தோ அவர்தம் துணை ஆசிரியர்களிடமிருந்தோ குறைந்தபட்சம் ஒரு பத்து-நாள் முகாமாவது நிறைவு செய்தவர்கள்) மட்டுமே அனுமதிக்கப்படுவர். விண்ணப்பம் செய்பவர்கள் விபஸ்ஸனா தியான முறையை முழுமனதாக கைகொண்டவர்களாக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஐந்து பத்து-நாள் முகாம்களாவது நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஒரு ஸதிபட்டான ஸ¨த்த முகாமிலாவது பங்கு பெற்றிருக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஒரு 10-நாள் முகாமிலாவது தம்ம சேவை புரிந்திருக்க வேண்டும்; மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தவறாமல் விபஸ்ஸனா பயிற்சி செய்துவந்தவராக இருக்க வேண்டும். இந்த முகாமிற்கான விண்ணப்பப் படிவம் (Long Course Application Form) இங்கே உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை சீராய்வு செய்ய பல நாட்கள் ஆகும் என்பதால், விண்ணப்பங்கள் வெகு முன்னதாகவே அனுப்பி வைக்க வேண்டும். முகாம் நடத்தும் ஆசிரியரின் அனுமதி கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே இந்த பயிற்சி முகாம்களில் அனுமதிக்கப்படுவர்.

மேலே செல்க

முப்பது-நாள் முகாமில் சேர்வதற்கான தகுதிகள்

இருபது-நாள் பயிற்சி முகாம்களில் பழைய மாணவர்கள் (அதாவது, திரு ச.நா.கோயங்கா அவர்களிடமிருந்தோ அவர்தம் துணை ஆசிரியர்களிடமிருந்தோ குறைந்தபட்சம் ஒரு பத்து-நாள் முகாமாவது நிறைவு செய்தவர்கள்) மட்டுமே அனுமதிக்கப்படுவர். விண்ணப்பம் செய்பவர்கள் விபஸ்ஸனா தியான முறையை முழுமனதாக கைகொண்டவர்களாக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஆறு பத்து-நாள் முகாம்களாவது நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும் (அவற்றுள் ஒன்றாவது இருபது-நாள் முகாம் முடித்த பிறகு நிறைவு செய்திருக்க வேண்டும்); குறைந்தபட்சம் ஒரு ஸதிபட்டான ஸ¨த்த முகாமிலாவது பங்கு பெற்றிருக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஒரு 10-நாள் முகாமிலாவது தம்ம சேவை புரிந்திருக்க வேண்டும்; மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தவறாமல் விபஸ்ஸனா பயிற்சி செய்துவந்தவராக இருக்க வேண்டும். இந்த முகாமிற்கான விண்ணப்பப் படிவம் (Long Course Application Form) இங்கே உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை சீராய்வு செய்ய பல நாட்கள் ஆகும் என்பதால், விண்ணப்பங்கள் வெகு முன்னதாகவே அனுப்பி வைக்க வேண்டும். முகாம் நடத்தும் ஆசிரியரின் அனுமதி கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே இந்த பயிற்சி முகாம்களில் அனுமதிக்கப்படுவர்.

மேலே செல்க

மூன்று-நாள் முகாமில் சேர்வதற்கான தகுதிகள்

மூன்று-நாள் முகாமில் அமர திரு ச.நா.கோயங்கா அவர்களிடமிருந்தோ அவர்தம் துணை ஆசிரியர்களிடமிருந்தோ குறைந்தபட்சம் ஒரு பத்து-நாள் முகாமாவது நிறைவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலே செல்க

ஸதிபட்டான சூத்த முகாமில் சேர்வதற்கான தகுதிகள்

ஸதிபட்டான சூத்த முகாம்கள் பத்து-நாள் முகாம்களைப் போன்றே கால அட்டவணையும், ஒழுக்கக் கட்டுப்பாடும் கொண்டிருக்கும். ஆனால், மாலை நேர சொற்பொழிவுகளில் விபஸ்ஸனா தியானமுறையை முறைப்படியாக விவரிக்கும் முதன்மை நூலான ஸதிபட்டான சூத்த கவனமாக ஆராயப்படும். இந்த முகாம்களில் திரு ச.நா.கோயங்கா அவர்களிடமிருந்தோ அவர்தம் துணை ஆசிரியர்களிடமிருந்தோ குறைந்தபட்சம் மூன்று பத்து-நாள் முகாமாவது நிறைவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். விண்ணப்பம் செய்பவர்கள் விபஸ்ஸனா தியான முறையை முழுமனதாக கைகொண்டவர்களாக இருக்க வேண்டும்; கடைசி பத்து-நாள் முகாமிற்குப் பின் வேறு வகை தியானப் பயிற்சிகள் எதுவும் செய்யாதவராக இருக்க வேண்டும்; மேலும், கடந்த ஒரு ஆண்டு காலமாக தவறாமல் விபஸ்ஸனா பயிற்சி செய்துவந்து, ஐந்து உறுதிமொழிகளை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்.

மேலே செல்க

வளரிளம் பருவத்தினருக்கான (Teenager) முகாமில் சேர்வதற்கான தகுதிகள்

இந்த ஏழு-நாள் விபஸ்ஸனா பயிற்சி முகாம் 15 வயது நிறைவடைந்து 19 வயதிற்குள் இருக்கும் வளரிளம் பருவத்தினருக்கு (Teenagers) மட்டுமே ஆனது. இந்த முகாமிற்கான விண்ணப்பப் படிவம் (Application form for Teenagers' courses) இங்கே உள்ளது. விண்ணப்பம் செய்வோர், படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, பெற்றோரின் அனுமதியுடன் அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் ஓர் உதவி ஆசிரியரால் நேரில் காணப்பட்டு, விண்ணப்பதாரர் பயிற்சியின் தீவிரத்தை சரிவர உணர்ந்தவராகவும், ஒழுக்க நெறியைத் தவறாமல் கடைப்பிடிப்பவராகவும் உள்ளாரா என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே முகாமில் அனுமதிக்கப்படுவர்.

மேலே செல்க

சிறுவர் முகாமில் சேர்வதற்கான தகுதிகள்

சிறுவர்-சிறுமியருக்கான 'ஆனாபானா ஸதி' முகாம்களில் தியானம் செய்யக் கற்றுக்கொள்ள விரும்பும் 10 முதல் 18 வயது வரையிலானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பெற்றோரோ, பாதுகாப்பாளரோ தியானம் கற்றவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

மேலே செல்க

'தம்ம சேது' முகாம் நிரல்

'தம்ம சேது' சென்னை மையத்தில் நடைபெறும் முகாம்கள் அட்டவணையை இங்கே காணலாம்.

மற்ற மையங்களில் நடைபெறும் விபஸ்ஸனா முகாம்களின் அட்டவணையை இங்கே காணலாம்.

குறிப்பு:
முகாம் நாட்கள் மாற்றத்திற்குரியவை. நீங்கள் முகாமில் பங்கேற்கத் திட்டமிடுகையில் தயவுசெய்து மையத்தைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முகாம் நாட்களை உறுதி செய்து கொள்ளவும்.

மேலே செல்க

பிற இடங்களில் நடைபெறும் முகாம்கள்

மதுரையில் உள்ள தம்ம மதுரா மையத்தில் நடைபெறும் விபஸ்ஸனா முகாம்களின் நிரல் அறியவும், பதிவு செய்யவும் இங்கே செல்லவும்.

கோவை, புதுவை, இராஜபாளையம் முதலிய மற்ற இடங்களில் நடைபெறும் விபஸ்ஸனா முகாம்களின் நிரல் அறியவும், பதிவு செய்யவும் இங்கே செல்லவும்.

மேலே செல்க